Tuesday, 10 October 2017

மியாஸ்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பூனை

என்னைப் பார்த்து பதுங்கி நிற்கும் 
அந்தப் பூனைக் குட்டியின் பெயர் 
மியாஸாக இருக்கலாம் ! 

அதன் உலகத்தில் 
அன்னமிடும் என் மனைவி, 
அன்னையாகவும், 
மிரட்டி, விரட்டும் நான் 
வில்லனாகவும் இருக்கலாம் ! 

மிரண்டு நிற்கும் அதன் பார்வையில் 
என் மனம் 
ஏதோ ஒன்றைக் கசிந்து நிற்கிறது, 
அதன் பெயர் 
கருணையாக மட்டுமே இருக்க முடியும் ! 

-மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts