Thursday, 26 October 2017

சிம்பொனி இரவு

தானியங்கு மாற்று உரை இல்லை.

அடுத்தவீட்டுப் பூனையின் 
மிய்யாவ்...மிய்யாவ் சப்தம் 
மெல்லியதாய் தொடங்கி நீள்கிறது 
சிம்பொனியின் ஒற்றை வயலினொன்று 
நீண்டிழுத்து குறைய 
தெரு நாய்களின் லொள் லொள் 
ஒருமித்துச் சிவமணி ட்ரம்ஸ் இசைக்கிறார் 
யாருக்காகவோ இசைக்கிறது குயில் 
வைத்தியாவின் வீணை போல் 
பானைக்குள் பண்டத்தை 
எலிகள் உருட்டி விளையாடுகின்றன 
விநாயக் ராம் இங்கெங்கு வந்தார்? 
உறுமியின் இழுப்பாய் 
அப்பாவின் 
ஆழ்ந்த கொர்ர்ர் கொர்ர்ர் குறட்டை 
இரவு ஒன்றும் மோசமில்லை 
பீத்தோவனின் 
இசையோடுதான் நகர்கிறது உறக்கமின்றி.

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts