Friday, 6 October 2017

கதம்பம்

கொடுத்துவிட்டுப் போன 
பூங்கொத்திலிருந்து 
நாகமொன்று வெளிவந்தது !

flower pokkay க்கான பட முடிவு

"பூங்கொத்தை வீசி விடு 
என்னைவிட 
அதுதான் விஷமானது" என்று 
நாகம் 
சொல்லிவிட்டு நகர்கிறது !

***

தானியங்கு மாற்று உரை இல்லை.

இசைக்கும் 
உன் விரல்களுக்குத் தெரியாது
இசைப்பது
என் பெயரென்று!

***
sad birds க்கான பட முடிவு
பறவைகள்
திரும்பி விட்டன...
கூடுகளைக் காணவில்லை!

***

படம் இதைக் கொண்டிருக்கலாம்: நெருப்பு மற்றும் இரவு

இருளை 
ஓட்டத் தெரிந்த
மெழுகுவர்திக்கு
வாழ்க்கையை
காப்பாற்றிக் கொள்ளத் 
தெரியவில்லை

***

buds with butterfly க்கான பட முடிவு

வண்ணத்து பூச்சியின் சிறகுகளில்
உழைப்பின் வியர்வைகளாய்....
மகரந்த துகள்கள்!

***
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார், வெளிப்புறம் மற்றும் இயற்கை

ஒரே முறைதான்
கன்னத்தில் அறைந்தேன்
காயம்
இடம் மாறி விட்டது!
வலி யில்லாமல்
எப்படி 
சுற்றித் திரிகிறாய்?

***
blind man love க்கான பட முடிவு

கண் இழந்தவன்  காதல்
கண்திறந்தது
இதயத்தின் வழியாய்

***

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts