
இலக்கிய உலகிற்குள்
சில பிரபலங்கள் மட்டுமே
இருக்கிறார்கள் ,
அவர்களுக்குள்
அவர்களே பேசிக் கொள்வார்கள்
அவர்களுக்குள்,
அவர்களே வசைந்தும் கொள்வார்கள்
ஏனென்றால்,
அவர்கள்தான் என்றும் அவர்களாம்
அவர்களின் மொழியும் விசித்திரமானது
தமிழை விட்டு விலகி
கூவம் நதியிலும் குளித்தெழுந்தும்,
அவர்களுக்காக சில பத்திரிகைகள்
அவர்களுக்காகவே ,
அவர்களால் சில பத்திரிகைகள்
அவர்கள் செத்தால்,
மற்றவர்கள் அழுகிறார்களா ,
என்றும் கூட பார்ப்பார்கள்
அவர்கள் சிரித்தால்,
மற்றவர்களும்
சிரித்தேதான் ஆக வேண்டும்
அறிவு ஜீவிகளின் உலகில்
நுழைந்துவிடாதீர்கள்,
அவர்கள்
முட்டாள்களாக மாறிவிடக் கூடும்
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment