Saturday, 28 October 2017

அனுமதிக்காத கவிதை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

கடலாய் விரியும் சொற்கள் 
கவிதையாய் தெளிகிறது. 
உணர்வுகள் வயலினிசைக்கின்றன 
மனதிற்குள் உட்கார்ந்த சுமை 
வயிற்றுக்குள் மகிழ்வாய் நெளிகிறது
பேரன்பின் பிரவாகங்கள்
பொய்யின் புனலாக ஓடுகின்றன
விளக்கின் வெளிச்சத்தில்
விட்டில் பூச்சிகளின் இறுதியாத்திரை
வெளிச்சம் தேடாத இருட்டாய் மனசு 
கண்களை மூடி உட்கார்ந்திருக்கிறேன்... 
எனக்கு மட்டும் தெரிந்த கவிதை
யாரும் வாசிக்க அனுமதிக்கவில்லை.

- மு. முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts