Wednesday, 11 October 2017

ஞொள் நிறைக் கொள்ளுகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

சமவெளியில்லா தளத்தில் 
கால்கள் பாவுகின்றன 
அடர் சூழ் மௌனம் இறந்து கிடக்க 
சூழலின் வெம்மை 
கருவையில் பற்றியெரிகிறது 
பெண்மையின் குறியீடுகள் சிதறிக்கிடக்க 
பன்மை படிமங்களுக்குள் 
பதுங்கிக் கொள்கின்றன வக்கிரம் 
நிழலொத்த நிஜங்கள் 
நிர்மதியில்லாமல் அலைகின்றன 
உண்மையின் பெயர் கூட 
பொய்யாகத்தான் இருக்குமென்று 
இறந்தவன் சொல்லிவிட்டுப் போகிறான் 
ஞொள் நிறைக் கொள்ளுகள் 
விளைந்திருக்கின்றன மனப் பிரதேசங்களில்... 
நிர்மித நிமித்தம் பறக்கும் 
குருவிகளின் ஆகார இரைகளில் 
கொஞ்சம் யாசிக்கிறேன்... 
ஞாதமென்று ஒன்றுமில்லா சூனியத்தில் 
அலையும் யாசக வழிப்போக்கன் 
நானும் ஞாயிறும்தான்

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts