Thursday, 12 October 2017

பழம் பெருமை

தானியங்கு மாற்று உரை இல்லை.

ஓடாத துரகத்தில் உட்கார்ந்து கொண்டு 
பயணம் செய்வதாகத் தெளிகைக் காட்டி 
அந்தக் காலத்தை இருக்கமாய்ப் பிடித்து 
இந்தக் காலத்தின் இன்பம் சுவைத்து, 
அடித்த சாட்டையில் விழுந்த அடியை 
காலம் கடித்ததாய் கண்ணீர் கூட்டி, 
கண்மறைத்த படல நோவில் காட்சிக் கண்டு 
காலம் மங்கியதாகக் குற்றப்படுத்தி, 
வாழும் தலைமுறையின் வழமைகளில் 
வக்கணையாக புறம்பேசி, 
பன்னிரண்டு தலைமுறைக்கும் 
தமிழெனக்கு தெரியுமென்ற செருக்கு தூக்கி 
நவீனத்தின் வெங்காயம் வெறுப்பதாய் 
சொல்லும் போக்கில் 
போகாத குதிரைக்கும் 
புல்லுக்கட்டு கிடைக்கவில்லையென்று 
பொங்கியெழும் பெரும் குற்றச்சாட்டு!

- முகமது பாட்சா
13/10/2016

No comments:

Post a Comment

Popular Posts