Saturday, 28 October 2017

கவிதையின் பெயரென்ன


poetry love girl painting க்கான பட முடிவு

அந்தக் கவிதை 
உன்னைப் போல்தான் புரியாமலிருந்தது 
வார்த்தைகளை 
கலைத்துப் போட்டு வாசித்தேன் 
பொருள் விளங்குமறிவு எனக்கில்லை 
ஆனாலும் 
அற்புதமாகத்தான் இருந்தது 
சிறந்ததொரு பாடலின் கட்டமைப்பில் 
மிளிர்ந்தது 
உன் விரல்களின் குளுமை 
அதற்குள்ளொட்டி வியாபித்தது 
மூச்சுக் காற்றின் வெப்பம் 
மெல்லென எட்டிப் பார்த்து இரசித்தது 
உன் குரல் போல் அதற்கு நடுக்கமில்லை 
உன் ஓரத் துணிச்சலின் வீரம் மட்டும் 
சொற்களுக்குள் உட்கார்ந்திருந்தன 
அர்த்தம் விளங்கா தாவும் வார்த்தைகள் 
உன் கண்களையே நினைவில் வைத்தது 
உன் கவிதையைத்தான் 
மேய்ந்து கொண்டிருக்கிறேன் 
என்னிதயத்தில் 
பூச்செடிகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன 
ஆமாம் 
இந்தக் கவிதையின் பெயரென்ன?

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts