
பருத்திக்காடு
சதைத்த கனிகள் சொரிந்து கிடக்கும்
ஒற்றை வழிப்பாதை
மூங்கில் புதர்களிடையே
வீசியெறிப்பட்ட எனது உடல்
அத்திமரத்தின் அடிப்பாகத்தில்
சாய்கிறேன்…
புளியமரத்தின் இலைகள்
இடவலமாய் அசைந்தபடி
சீரற்ற என் சதுப்பு நிலத்தில்
சுவடு பதிய வீழ்கின்றன
எதிரே
நந்தவனத்து அரச மரத்தடியில் கௌதமர்;
புத்தனாக ஞானம் பெறும் தியானாசனத்தில்
கடவுளைச் சபித்தபடி
இரசனையற்ற அவன் இசையை
செவியேற்கிறேன்…
ஞானத்தின் முடிவில்
என்னை அறியாதவன் போல்
கடந்து நகர்கிறான் புத்தன்
இலைகளற்ற அத்திமரத்தினடியில்
அளப்பரிய என் காதலும்
உதிர்ந்து கிடக்கிறது சருகாக…
ஸர்மிளா ஸெய்யித்
No comments:
Post a Comment