Sunday, 8 October 2017

கதம்பம்


thinking க்கான பட முடிவு

சுட்டதாக சொல்கிறார்கள் , 
சுடாமல் சுட்டதாகவும் சொல்கிறார்கள் 
சுட்டார்களா ? சுடவில்லையா ?  
படைப்புகளில் சுட்டதைதான் சொல்கிறேன் !

***
thinking க்கான பட முடிவு

ஆறுதலைத் தேடி 
சுயம் தொலைந்து நிற்கிறேன் , 
ஆறுதலும், 
ஆறுதலை தேடி 
அலைந்து கொண்டிருக்கலாம் !

***
petals க்கான பட முடிவு

ஒவ்வொரு இதழ்களாக
பிய்த்தெறிகிறேன்,
காம்புகள் மட்டும் கையிலுள்ளது ,
பூக்களைக் காணவில்லை !

***
தானியங்கு மாற்று உரை இல்லை.

நீ
என் கையை
பிடித்திருப்பது,
தொலைந்து விடுவேன் என்றா?
ஓடி விடுவேன் என்றா?

***
தானியங்கு மாற்று உரை இல்லை.

என் அப்பன் தொலைத்த நிலத்தை
அடையாளம் காண முடியவில்லை?
அல்பமாய் பார்க்கிறான்
அடுக்கு மாடி சொந்தக் காரன்!

***
தானியங்கு மாற்று உரை இல்லை.

காதல் கடிதங்களை
சேர்த்து வைத்திருக்கிறேன்.
பிரியும் போது கொடுத்தனுப்ப!

***
தானியங்கு மாற்று உரை இல்லை.

பிரியமானவனே...
இதயத்தை பிளந்து காட்ட
என்னால் முடியாது!
அதில் இருக்கும்
அத்தனை 
கேள்விகளுக்கும்
உன்னாலும்
பதில் சொல்லவும் முடியாது!
.......இப்படியே நகர்வோம்.....

***
தட்டாம்பூச்சி க்கான பட முடிவு

ஓடி விளையாடுகின்றன
தட்டாம் பூச்சிகள்....
மழை வருமா?
.
***
தானியங்கு மாற்று உரை இல்லை.

பூ வெல்லாம் கேட்டு பார்!
வாழ்க்கையின் வடிவங்களை
வகை வகையாய் சொல்லும்!
அழகின் ஆராதனைகள்
மற்றைய ஜனனத்தின்
அஸ்திவாரம் என்று!
ஒற்றை நாள் ஜனனம்
மற்றை நாள் மரணமென்று!

***

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts