மாலுமியாகிய_நான்..
சிறுவயதில்,
அண்ணன் குளிக்கக் கொடுத்த வாளி நீரில்
அம்மா சமையலுக்கு வைத்திருந்த
உப்பைக் கலந்து கடலாக்கினேன்
அப்பாவிடம் கையொப்பம் வாங்க வேண்டிய
எனது பள்ளி பரீட்சைத் தாளில்
கப்பலொன்றை வடித்துக் கடலுக்குள் செலுத்தி
ஓட்டியதைக் கண்டு
நிச்சயம் நீயொரு மாலுமியாவாய்
என்று சிரித்தபடி கூறிய தாத்தா
படுத்தபடுக்கையாகக் கிடந்து
கடைசி ஆசையாய்
எனைக் காண வேண்டுமெனக்
கூறிய நாளில் தான்
விபத்து நேரிட்டு மரணமடைந்தாலும்
அதற்கு கம்பெனி பொறுப்பாகாது
என்ற சொற்கள் நிரம்பிய
ஒரு வருட வேலைக்கான
விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு
பன்னாட்டுக் கப்பல் கம்பெனியொன்றில்
நான் பணிக்கு சேர்ந்திருந்தேன்
அப்பொழுது என்னை பேரிரைச்சலோடு
தழுவிச் சென்ற கடலலைக்குள்
ஒழிந்திருந்தது
தாத்தாவின் நெடும் மௌனம்
என் முதல் கடற்பயணத்தில்
இரவெங்கும் காற்றில்
காதல் கவிதைகளை வரையும்
நைஜீரியனின் உணர்வுகளை
உள்ளிழுத்துக் கொண்ட கடல்
இரண்டாவது கடற்பயணத்தில்
பகல்பொழுதுகளில் கவிதை வரையும்
பிலிப்பைனியின் வாயிலாய்
மொழிபெயர்த்துக் கூறியது
காத்திருக்கும் காதலியின் நினைவுகளை
எப்பொழுதும் கடுகடுவென
முகம் காட்டித் திரியும்
ஈரானியக் கேப்டன்
தன் மகனின் பிறந்தநாளை
எங்களோடு மகிழ்வாய் கொண்டாடி
யாரும் பார்க்காத பொழுதில்
மறைந்த மகனுக்காகக்
கடலில் வடித்தக் கண்ணீரை
இனிப்பாய் மாற்றிய மூன்றாவது கடற்பயணம்
இரண்டாண்டுகளாய் விடுப்பின்றி உழைத்தும்
ஊதியம் மறுக்கப்பட்ட சிரியாக்காரனோடு
தேனீர் பருகிய நான்காம் பயணத்தில்
உவர்த்திருத்தது
ஐந்தாவது பயணத்துக்கான ஆயத்தத்தோடு
காத்திருக்கும் என் முன்னே நிற்கிறார்
ஐம்பதுக்கும் மேற்பட்ட கடற்பயணங்களை
கடந்திருந்த பிரெஞ்சு முதியவர்
தனது கடைசி பயணத்தையும்
சிறப்பாய் முடித்த திருப்தியோடு
பல நாடுகள்
பல துறைமுகங்கள்
பல மனித முகங்கள்
பல மொழிகள்
இன்பம்
துன்பம்
ஓய்வுக்குப்பின் குடும்பத்தாரோடு
களிக்கும் பொழுதுகளென பலவற்றை
என்னோடு அசைபோட்டபடி நடந்து வருபவர்
கடலை பார்த்ததும் கண்களை மூடி
தியானிக்கின்றார்
அவரது மனவெளியில் இருக்கும்
ஆழ் கடலின் அமைதியில்
நான் வடித்த முதல் காகிதக்கப்பல்
மிதந்து கொண்டிருக்கலாம்
அதன் மிதத்தல் அழகை இரசிப்பதைக் காட்டிலும்
எனக்காக புறப்படக் காத்திருக்கும்
கப்பலுக்குச் சென்று உழைப்பதையே விரும்புகிறேன்
மாலுமியாகிய நான்..
- இருத்ரன் ரிஷி.
சிறுவயதில்,
அண்ணன் குளிக்கக் கொடுத்த வாளி நீரில்
அம்மா சமையலுக்கு வைத்திருந்த
உப்பைக் கலந்து கடலாக்கினேன்
அப்பாவிடம் கையொப்பம் வாங்க வேண்டிய
எனது பள்ளி பரீட்சைத் தாளில்
கப்பலொன்றை வடித்துக் கடலுக்குள் செலுத்தி
ஓட்டியதைக் கண்டு
நிச்சயம் நீயொரு மாலுமியாவாய்
என்று சிரித்தபடி கூறிய தாத்தா
படுத்தபடுக்கையாகக் கிடந்து
கடைசி ஆசையாய்
எனைக் காண வேண்டுமெனக்
கூறிய நாளில் தான்
விபத்து நேரிட்டு மரணமடைந்தாலும்
அதற்கு கம்பெனி பொறுப்பாகாது
என்ற சொற்கள் நிரம்பிய
ஒரு வருட வேலைக்கான
விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு
பன்னாட்டுக் கப்பல் கம்பெனியொன்றில்
நான் பணிக்கு சேர்ந்திருந்தேன்
அப்பொழுது என்னை பேரிரைச்சலோடு
தழுவிச் சென்ற கடலலைக்குள்
ஒழிந்திருந்தது
தாத்தாவின் நெடும் மௌனம்
என் முதல் கடற்பயணத்தில்
இரவெங்கும் காற்றில்
காதல் கவிதைகளை வரையும்
நைஜீரியனின் உணர்வுகளை
உள்ளிழுத்துக் கொண்ட கடல்
இரண்டாவது கடற்பயணத்தில்
பகல்பொழுதுகளில் கவிதை வரையும்
பிலிப்பைனியின் வாயிலாய்
மொழிபெயர்த்துக் கூறியது
காத்திருக்கும் காதலியின் நினைவுகளை
எப்பொழுதும் கடுகடுவென
முகம் காட்டித் திரியும்
ஈரானியக் கேப்டன்
தன் மகனின் பிறந்தநாளை
எங்களோடு மகிழ்வாய் கொண்டாடி
யாரும் பார்க்காத பொழுதில்
மறைந்த மகனுக்காகக்
கடலில் வடித்தக் கண்ணீரை
இனிப்பாய் மாற்றிய மூன்றாவது கடற்பயணம்
இரண்டாண்டுகளாய் விடுப்பின்றி உழைத்தும்
ஊதியம் மறுக்கப்பட்ட சிரியாக்காரனோடு
தேனீர் பருகிய நான்காம் பயணத்தில்
உவர்த்திருத்தது
ஐந்தாவது பயணத்துக்கான ஆயத்தத்தோடு
காத்திருக்கும் என் முன்னே நிற்கிறார்
ஐம்பதுக்கும் மேற்பட்ட கடற்பயணங்களை
கடந்திருந்த பிரெஞ்சு முதியவர்
தனது கடைசி பயணத்தையும்
சிறப்பாய் முடித்த திருப்தியோடு
பல நாடுகள்
பல துறைமுகங்கள்
பல மனித முகங்கள்
பல மொழிகள்
இன்பம்
துன்பம்
ஓய்வுக்குப்பின் குடும்பத்தாரோடு
களிக்கும் பொழுதுகளென பலவற்றை
என்னோடு அசைபோட்டபடி நடந்து வருபவர்
கடலை பார்த்ததும் கண்களை மூடி
தியானிக்கின்றார்
அவரது மனவெளியில் இருக்கும்
ஆழ் கடலின் அமைதியில்
நான் வடித்த முதல் காகிதக்கப்பல்
மிதந்து கொண்டிருக்கலாம்
அதன் மிதத்தல் அழகை இரசிப்பதைக் காட்டிலும்
எனக்காக புறப்படக் காத்திருக்கும்
கப்பலுக்குச் சென்று உழைப்பதையே விரும்புகிறேன்
மாலுமியாகிய நான்..
- இருத்ரன் ரிஷி.
No comments:
Post a Comment