
மணல் மூடியிருக்கும்
மண்டையோட்டின் மீது
நின்று கொண்டு
மருத்துவக் கல்லூரி
பத்துநிமிடப் பயணம்
என்கிறார்கள்
ஐந்தினையில்
ஐந்தாம் திணையில்
நின்று கொண்டு
ஐஸ் வாட்டர் கிடைப்பதாய்
குளுகுளு தமிழில்
குளிரூட்டுகிறார்கள்
"உடனடியாக பதிவு செய்தால்
ஒருபவுன் தங்கம்" என்று
உற்சாக குரலில்
உரமூட்டுகிறார்கள்
வண்ண வண்ண நிறங்களில்
கொடியை நட்டுவிட்டு
மாண்டேஜ் பாடலொன்றை
மறுக்காமல் வைத்துவிடுகிறார்கள்
இத்தனையும் நம்பி
இடத்தை பதிவுசெய்ய
மனைவிமக்கள் நகையை
மார்வாடியிடம் வைத்தால்
கூடிக் கொண்டே போகிறது
இடத்தின் மதிப்பை விட
வட்டியின் மதிப்பு
பாடலாசிரியர் அருண்பாரதி
No comments:
Post a Comment