Wednesday, 18 October 2017

காலொடிந்த குதிரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் அமர்ந்துள்ளனர்

காலம் பின்னோக்கி இழுத்துச் சென்ற குதிரை 
காலொடிந்து நிற்கிறது 
நிழலுருக்கி செய்த நிஜங்கள் 
நீள் வட்டப் பாதைகளில் வட்டமடிக்கின்றன 
அணைகளுக்கும் மின்சாரத்திற்கும் ஆர்ப்பரித்தவர்கள் 
ஆதிகாலத்தைத் தேடுகிறார்கள் 
பறப்பதென்பது பறவைகளுக்கு மட்டுமே இலகுவானது 
தேசாந்திரியின் கைகளில் 
தேசியக் கொடி கிழிந்துதான் தொங்குகிறது 
அவன் புல்லாங்குழலின் ஓட்டைகளை 
காற்றினால் அடைக்க முடியவில்லை 
அவன் வீசியெறிந்த கோபம் 
ஓசோனின் ஓட்டைகளை உருவாக்கியிருக்கலாம் 
சுகம் சொறிந்துவிட்டதில் 
புண்ணாகிக் கிடக்கின்றன தேகங்கள் 
இரத்த அடுக்குகளில் உயிரணுக்கள் இறந்து விட்டதாம் 
போலிமை புனைந்த நீள்கயிற்றின் தயவில் 
உச்சத்தில் பறக்கின்றது தேசியக் கொடி 
காலொடிந்த குதிரை அங்கேயே நிற்கட்டும் 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts