
நீங்கள் பார்த்தீர்களா?
எனது தேடலின் மிச்சம் எங்கோ ஒளிந்திருக்கிறது
அஃது
இந்தக் கவிதைதான் என்று சொல்லிவிட்டு
கடந்து விடாதீர்கள்
உங்களின் தேடலில் கூட அஃது ஒளிந்திருக்கலாம்
வசதியென்பது
பார்க்காதவொன்றுதான்
பார்க்காதவொன்றை நான் எப்போதும் பார்ப்பதில்லை
இன்பம் என்று சொல்லுகிறீர்கள்
கவிதையெழுதும் போது அது கிடைத்துவிடுகிறது
ஞானம் என்று யாரோ சொல்லுகிறீர்கள்
அது நான் தேடியும் கிடைக்காது
தானாக ஒட்டும் நேரத்தில் ஒட்டிக் கொள்ளும்
இப்போது நான் சாதாரணமான போகிதான்
அன்பா?
அதுதான் உங்களிடமிருந்து கிடைத்து விடுகிறதே
என்னது மரணமா?
நானாகத் தேடினால் அது தற்கொலை
தானாக வரும் போது வரட்டுமே...
இளமை என்றுதானே சொல்லுகிறீர்கள்
அதைத்தான்
கவிதைகளில் கடத்தி வைத்திருக்கிறேனே
பிறகு என்னதான்
என்று ஏன் சளித்துக் கொள்கிறீர்கள்
தேடிப் பார்ப்போம் கிடைக்காமலா போய்விடும்.
- மு. முகமது பாட்சா
No comments:
Post a Comment