Monday, 18 December 2017

நான் இரசித்த கவிதைகள் 105

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

இறப்பு

சிறிதா பெரிதா
திலகமாய்த் திரண்டதா
பாழ்நுதலாய்ப் பரந்ததா
மாலியவள்
விழியாய்க் குறுகியதா
வாள்நோக்காய் நீண்டதா
அவள்
சடைபோல் ஒன்றா
சடையுண்ட குழல்போல பலவா
வண்டியாய்ச் செல்லுமா
பாலமாய் இருக்குமா
மணமடுத்த மஞ்சமா
மஞ்சமடுத்த துயிலா, உயிரா
கூண்டு தப்பிய கிளியா
கூண்டேகும் கிளியா
கூடேகும் புள்ளா
கூடு தப்பிய புள்ளா
வலைப்பட்ட புறாவா
சூடப் பறித்த மலரா
வாட எறிந்த பூவா
கிழியக் கழித்த உடையா
துவைக்கப் போட்ட துணியா
திரியெரிந்த விளக்கா
காற்றணைந்த சுடரா
செய்வினையா
செயப்பாட்டு வினையா
தொடர்கதையின் ஒரு பிரிவா
சிறுகதையின் முடிவா
கால்புள்ளியா
முற்றுப்புள்ளியா?

கவிஞர் சி.மணி
(புதுக்கவிதைகளின் முன்னோடி)

No comments:

Post a Comment

Popular Posts