Thursday, 28 December 2017

கவிதைக்காரன்



கவிதைகளில் வாழ்கிறவன், 
கதைகளுக்குள்ளும் பிரவேசிக்கிறான். 

வானத்தை மடக்குவதும், 
விரிப்பதுவும் 
அவனுக்கு  கை வந்த கலை ! 

நட்சத்திரங்களை இடம் மாற்றி 
பண்டங்களை 
உருமாற்றத் தெரிந்தவன், 

அவன் வானத்தில் மட்டும் 
காதலென்ற ஒற்றைச் சிறகு 
எப்பொழுதும் பறந்து கொண்டேயிருக்கும் ! 

எழுத்துகளில் கண்கள் வரைந்து 
கோபம் காட்டவும், 
கருணைக் காட்டவும் தெரிந்தவன், 

எழுத்துகளுக்குள் 
எழுத்தாக வாழக் கற்றவன், 
வார்த்தைகளால் 
ஆயுதங்களைத் தயாரிக்கத் தெரிந்தவன் ! 

அவனது கனவுலகமும் 
திறந்து வைத்த தந்திரவெளி, 
அந்த மந்திரவெளியில் 
யாரும் பிரவேசிக்கலாம் , 
பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்! 

அவனென்றுமே, 
மகா கவியாக இருப்பது கிடையாது, 
அதன் உயரம், கோபுரத்திலேற்றி 
மற்றவர்களால் 
அண்ணாந்து பார்க்க வைத்துவிடும், 

அவனென்றுமே, சாதாரணன்தான் ! 

- மு.முகமதுபாட்சா*
28/12/2016

No comments:

Post a Comment

Popular Posts