
எதையோ சொல்லவந்தவன்
எதையோ சொல்லிவிட்டுப் போகிறேன்,
வங்கியின் வாசலில் இறந்தவருக்கு
இன்று வருடத் திதி
செலவிற்குப் பணமில்லை...அன்றும் அப்படித்தான்,
உருப்படியாக ஒரு படமும் ஓடவில்லை
முதல்வரின் கனவு நடிகர்களுக்குத் தொற்றிக் கொள்கிறது,
விருது பெற்றவரின் கவிதைகளைப் படித்தேன்
அத்துணையும் சுமார்தான்,
நெடுவாசல் என்னவாயிற்று என்றே தெரியவில்லை,
ஊடகங்களில் அரசு விளம்பரம் முக்கியம்,
மணல் லாரிகளில் மணல் வந்தால் எனக்கென்ன?
என் வீடு மண்சுவருதான்
ஆற்றிலாவது தண்ணி ஒழுங்கா ஓடுமா?
நீட் இல்லையென்றால் அனிதா ஸ்டெதஸ்கோப்போடு
வெள்ளைக் கோட்டில் சென்றிருப்பாள்,
மதுக்கடையில் விழுந்து கிடப்பவர்களைப் பார்த்தால்
பரிதாபமாகவிருக்கிறது
பாவம் அவர்களின் மனைவி மக்கள்,
இதோ வீடு வந்துவிட்டது
ரோட்டில் செல்லும் இந்தப் பிணத்தின் கதை
என்னவாக இருக்குமென்று தெரியவில்லை...
நமக்கேன் வம்பு நான் நடுத்தரக் குடும்பஸ்தன்.
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment