
புறாக்கள்
தங்களின் சிறகுகள் ஒவ்வொன்றையும்
உதிர்க்கின்றன...
அமைதியைப் பிடுங்கியெறிந்து
உதிரத்துளிகளைப் பூசிக் கொண்டவை
இராசாளியின் கண்களை
இடம் மாற்றிக் கொள்கிறது....
நகங்களால் தேகத்தைக் கீறிக் கொண்டு
எலும்புகளையெடுத்து
துப்பாக்கிகள் செய்கின்றன...
தோட்டாக்களுக்காக
ஈயத்துடன் வலிகளைப் பிசைகிறது...
பூனைகளின் பார்வைகளை
இரவல் வாங்கிக் கொண்டு பதுங்கு நடையில்
நரியின் தந்திரம் ஒட்டிக் கொள்ள...
வேடன் வில் அம்பைச் செங்கோலாக்கி
இராசாவாக நகரும் வேளையில்
எப்போதும் எதுவும் நடக்கலாம்...
வலிகளின் தர்மம்
அதர்மத்தை வேரோடு வீழ்த்துவதற்காக!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment