
எட்டு பக்கக் கதையை வைத்துக் கொண்டு
இதுதான் நாவலென்கிறாள்,
சிரித்துவிட்டேன்,
ஒற்றை வார்த்தை வைத்துக் கொண்டு
கவிதை எழுதும் போது ,
இதுவும் சாத்தியமென்றாள் ,
உள்ளே நுழைந்து பார்த்தேன்,
ஒற்றை வரியைக் கடக்கும் முன்பே
ஓராயிரம் நினைவுகளை மீட்டு வைக்கிறாள் ,
அவளின் இரவுகளும் பகல்களும்
என்னை கடத்திச் செல்கின்றன ,
அவளின் அழுகைகளை என் கண்களில்
அனாயாசமாய் இறக்கி வைக்கிறாள்,
அவளின் கதையின் நாயகன்
நானில்லை என்றாலும்
நானும் இருக்கிறேன் தோழனாக ...
இன்னமும் படிக்காத பக்கங்கள்
இருக்கத்தான் செய்கின்றன ,
ஆம்,
அவளிடமும் நான்
படிக்காத பக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன ,
சிலச் சிரிப்புகளும்
அவள் பக்கத்தில் சிதறிக் கிடந்தன ,
அவளின் சிரிப்புகளில் நான் இயைந்த போது
என் கண்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்,
அப்போதுதான் அவளின் கண்களைக் கவனித்தேன்,
மிச்சமுள்ள கதையை ,
இன்னமும் அவள் எழுதாமல் வைத்திருப்பதை,
.
இப்போதும் சொல்கிறேன்
அவள் எட்டு பக்கத்தில் எழுதியிருப்பது நாவலல்ல,
பெரும் காவியம்
- நட்புடன்...முகமது பாட்சா*
25/12/2016
No comments:
Post a Comment