Thursday, 7 December 2017

முன்னொரு காலத்தில்

முன்னோரு காலத்தில்

தானியங்கு மாற்று உரை இல்லை.

ஒரு புதுக்கதை தொடங்கும் முன்பே, 
இந்தக் கதை 
இப்படிதான் முடியுமென்று சொன்னார்கள் ! 

இல்லையில்லை, 
இது, 
வேறொரு தளத்திற்குச் செல்லும் கதையென்று, 
சொல்லப்பட்டது ! 

எழுதி முடித்த கதையை 
வாசித்துவிட்டதாகச் சிலர் சொன்னார்கள் ! 
எழுதிக் கொண்டிருக்கும் கதையை, 
யாரும், படித்திருக்க முடியாதென்று, 
எழுத்தறிக்கைகள் வாசிக்கப் பட்டன ! 

நம்பிக்கை வாசகர்கள், 
ஆமாம்! ஆமாம் ! என்றார்கள் ! 

முன் கூட்டிச் சொன்னவர்கள் எல்லோரும், 
கதைவிடக் கற்றவர்களென்று 
எழுதுகிறவர்கள் தரப்பில் 
எடுத்து வைக்கப் பட்டது ! 

இப்படியும் இருக்கலாம் என்று கதைத்தவர்கள், 
எழுத்துலகின் துரோகிகளென 
விமர்சிக்கப் பட்டார்கள் ! 

சில திருத்தங்கள் செய்யப்பட்டு 
கதை 
வேறொரு தளத்திற்கு நகர்த்தப் பட்டது ! 

இந்தக் கதை, அப்படி முடியும் கதையல்ல, 
முடியாத கதைதான் 
என்று நிம்மதி வந்தது ! 

முன் கூட்டிச் சொன்னவர்களெல்லாம், 
முடங்கிக் கொண்டார்கள், 
அவர்களை 
முட்டாள்களாய்ப் பார்த்தது வாசகர் உலகம் ! 

எழுதுபவரே இல்லாமல் எழுதப் படுகிறதோ? ! 
என்ற சந்தேகம் வந்தவுடன், 
திடீரென்று கதை , 
முடிந்துவிட்டதாகவே அறிவித்து விட்டார்கள் ! 

அதிர்ச்சியில் வாசகர்கள் ஆர்ப்பரித்த போது, 
மீண்டும் முடியவில்லையென்று சொல்லி 
முற்றிலுமாகவே முடித்துவிட்டார்கள் ! 

அடுத்துத் தொடரும் சரித்திரக் கதையில், 
புதிய திருப்பங்கள் இருக்குமென்று 
புதுக் கதையொன்றை விடுகிறார்கள், 

ஆனாலும், முடிந்த கதையில் மட்டும், 
இளவரிசியின் மரணம், 
மர்மமாகவே முடிந்து போனது ! 

- மு.முகமது பாட்சா*
07/12/2016

No comments:

Post a Comment

Popular Posts