Friday, 29 December 2017

கிழிக்கப் பட்ட திகதிகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.
Painting Famous Artist : Jatin Das

கிழிக்கப் பட்டக் காலண்டரின் திகதிகள் 
இறந்துவிட்டதாகப் பேசிக் கொண்டார்கள், 
கடந்து போன காலங்கள் 
இடுகாட்டின் சுவடுகளெனக் 
கவிதையெழுதுகிறான் ஒருவன், 
பூமியில் புதைந்த பிணங்கள் 
மக்கிவிட்டதாக 
மண் வளச் சோதனை சொல்கிறது, 
ஆதாம் விழுந்தவிடத்திலும் 
சபிக்கப் ப ட்ட கனி மரங்கள் 
முளைத்திருக்கின்றன, 
ஏவாள்களை இரதத்தில் பூட்டி 
ஊர்வலம் போகிறார்கள் சாத்தான்கள், 
நதிகளை அழுக்காக்கியவர்கள் 
பாவங்களைச் சுமந்து கொண்டு திரிகிறார்கள், 
விலாவெலும்பின் விரிக் கூட்டில் 
ஆதாமின் மூச்சுக் காற்றுப் படர்கிறது... 
சபிக்கப் பட்டக் கனிகளை உண்பவன் 
ஏவாளைக் குற்றம் சொல்கிறான், 
இறைத் தூதர்கள் 
இனி வருவதற்கில்லை என்பதால், 
காபிரியல் பெருங்காற்றை விழுங்கி 
காத்திருக்கிறார் இறைவனின் கட்டளைக்காக, 
காலண்டரின் திகதிகள் 
ஒன்று சேரும் அப் பெரும் நாளில் 
பிறக்கலாம் இனிய புத்தாண்டு.

- மு.முகமது பாட்சா*

No comments:

Post a Comment

Popular Posts