
வரலாற்றின்
இராசத் தந்திரங்கள்
அவ்வப்போது
காய்களை
நகர்த்தத்தான் செய்கின்றன !
கீழேயிருக்கும் சிப்பாய்களுக்கும்
மகுடம் சூட்டிக் கொள்ள
ஆசை வந்து விடுகிறது !
எட்டிப் பார்ப்பவன் கூட
இருப்பதை
எடுத்துக் கொள்ளத்தான்
பார்க்கிறான் ,
பறித்துக் கொண்டவனுக்கு
உடன் இருந்தவன்
பங்காளியாகி விடுவான் !
ஆட்டம் தொடங்கும் போது
அணியில் இருந்த காய்கள்
நகரும் வேளையில்
தானும் நகர்ந்து விடுகின்றது
எதிரெதிர் அணிகளுக்கு !
அரசியல் சூதுகளெல்லாம்
சாணக்கியன் பெயர் சொல்லி
நியாயங்கள் செய்கின்றன,
சாணக்கியன்,
என்ன நியாயத்தானா ?
பதவிகளுக்குள்தான்
பதுங்கி வாழ்கிறது,
தேச நலன்,
பதாகைகளை
உயர்த்திப் பிடிப்பவர்கள்,
பதுங்கு குழிகளில்,
பரிசீலனை செய்தவர்கள்தான் !
ஆட்சிக் கட்டில்
யாருக்கென்பதுதான்
அடுத்தடுத்ததில் பரிசீலனை,
அழுகையும், கண்ணீரும்
அதற்கடுத்துதான் !
- மு.முகமது பாட்சா 05/12/2016
No comments:
Post a Comment