
மொழித் திருத்தாப் பிழைக் கூற்றில்
உட்கார்ந்திருக்கும்
யதார்த்தச் சிந்தனைகளின் கூட்டடைவில்
நீயென்பதும் நானென்பதும்
வெற்றுச் சொல்லாய்
வேற்றுடல் புனைந்திருக்கும் ஆசை
மாயை அகங்காரச் சொரூபத்தின்
தேற்றுவெளியின் தெளியற்ற
நீர்வெளிப் பெருக்கின் நிறைந்த
பிம்பப் பிழைக் கயல்கள்
நீந்துவதும் மகிழ்வதும்
தூண்டிலனின் சிறு சொடுக்கு முள்
குத்தி நிற்கும் ஆகாரத்தை
ஆதாரமென்று எட்டிப் பறிக்கும் நொடி
வீழும் துள்ளலும் அற்பம் அகிலமென
உணர்வதற்குள் முடியும்
ஒரு பெரும் யுகத்தின் சொற்ப வாழ்க்கை.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment