Sunday, 31 December 2017

2018

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார்
2017 ல் 
கிழித்துப் போட்ட கவிதைகளையெல்லாம், 
அரைத்துப் போட்டு 
முறம் செய்து கொண்டிருந்தாள், அம்மா  

அதில் புடைத்துப் போடும் அரிசியில் 
புதுக் கவிதைகள் பிறக்கலாம் , 2018 ல் 

கொழித்துப் போட்ட கூளங்களை மேயும் 
கோழிகளும் கொடுக்கலாம் , நல்ல கவிதைகளை, 

அரித்துப் போட்ட தானியத்தில், 
விருட்சம் கூட, மிரட்சியாக வளர்ந்து நிற்கலாம், 

விருட்சம் தரும் கனிகளைக் கொறிக்கும் 
அணில்கள் கூடக் கவிதைகள் எழுதலாம், 

அணில்களை விரட்டும் அகடூரிகளெல்லாம் 
கவிதைகளிலமர்ந்து புரட்சி செய்யலாம், 

முறத்தில் இணைந்த கவிதைகள் கூட, 
முழுதாய் புது வடிவம் எடுக்கலாம்  

2017 ல் 

கிழித்துப் போட்ட கவிதைகளையெல்லாம், 
அரைத்துப் போட்டு 
முறம் செய்து கொண்டிருந்தாள், அம்மா ! 

- மு.முகமது பாட்சா*

No comments:

Post a Comment

Popular Posts