Tuesday, 12 December 2017

வீசியெறிந்த காசுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், தாடி மற்றும் உட்புறம்

ஆசிர்வதிக்க உயர்த்தியவரின் கைகளில் 
அருள் ரேகை ஓடிக் கொண்டிருந்தது, 
யூதாஸின் கோப்பைக் கவிழ்ந்து கிடக்க... 
பிதாகரஸ் தீர்வு காணவியலாமல் 
சாக்கரட்டீஸின் வீதி 
தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப் படுகிறது, 
யுரேகாவின் மூலக் கூறுகள்: பிரிக்கப் படுகின்றன 
திராட்சை ரசத்தின் புளிப்புச் சுவையில் 
மூளையின் நரம்புகள் ஊறுகின்றதாம், 
அலெக்சாண்டரின் கிரீடத்தைக் கழற்றி விட்டார்கள் 
புதைக்கும் போது, 
ஆசைகளைத் துறந்தவன் 
காசுகளை வீசியெறிகிறான் 
மனசாட்சி விழித்துக் கொண்டு கழுத்தை நெருக்குகிறது, 
சிலுவைதான் 
யூதாஸின் மரணத்தையும் நிச்சயம் செய்கிறதாம்
வாக்களிக்க நிற்பவர்களின் கைகளில்
வீசியெறிந்த காசுகள் 
நோட்டுகளாக சிரித்துக் கொண்டிருந்தது

- மு.முகமது பாட்சா* 

No comments:

Post a Comment

Popular Posts