
விந்துக்குள் உயிராக
கருவிற்குள் சேராமல்
வெளியேறி நானிருந்தால்
நானென்ற நானே
காணாதிருப்பேனோ !
உருவாகித் திருவாகி
உருவாகாக் கருவாக
உடைந்தே கலங்கியிருந்தால்
கவலைகள் காணாத
கனவாக ஆகியிருப்பேனோ !
நிலையாத இவ்வுலகும்
நில்லென்றாகியிருந்தால்
நிலையான இல்லென்றே
நிலையாக நின்றிருப்பேனோ !
-மு.முகமது பாட்சா*
17/12/2016
No comments:
Post a Comment