Saturday, 16 December 2017

ஆதிக்க விசை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: இரவு

இதயம் என்பது, 
இரண்டு ஓசைகளின் சங்கமமாக 
இருக்க வாய்ப்பேயில்லை , 

மூளையின் முடிச்சுகளில்தான் 
நினைவுகள் கட்டப் பட்டிருக்கின்றன , 

தமனிகளின் துடிப்புகளை 
முடிச்சுகள், மாற்றி வைக்கக் கூடும், 

நினைவுகளின் முடிச்சுகளை 
நீதான், அதிகம் 
சிக்கலாக்கி வைத்திருக்கிறாய் , 

இரத்த நாளங்களின் அழுத்தத்தில், 
உன் அழுத்தமும் அழுந்திக் கிடக்கிறது, 

வியர்வைத் துளிகளை வெளியேற்றும் 
உடலுக்கு மட்டுமே தெரியும் 
உன் ஆதிக்க விசைகள் , 

தூக்கத்தைத் தொலைக்கச் சொல்லி, 
என் கண்களுக்குக் கட்டளையிடுகிறாய் , 

மூளையின் ஆதிக்கத்தை 
நீத்தானே, முடக்கி வைத்திருக்கிறாய் ! 

உடலியலுக்குள் ஒளிந்து கொண்டு 
கண்ணாமூச்சியாட, 
உனக்கு மட்டுமே தெரிந்தக் கலை ! 

எனக்கும் கற்றுக்கொடு, 
உன் உடலியலுக்குள் ஒளிந்து கொண்டு 
நானும் விளையாட ! 

-மு.முகமது பாட்சா*
16/12/2016

No comments:

Post a Comment

Popular Posts