Saturday, 23 December 2017

கிறிஸ்துமஸ்



கூட்டல் குறிப் போட்டு 
சிலுவை என்கிறாள் 
அந்தச் சுட்டிப் பெண்

கோமாளித் தாத்தா 
கொடுத்தப் பரிசில் 
பார்பி பொம்மை

குடிலுக்கு 
குச்சியை நட்டு விட்டு 
குடிலையே 
தான் தான் அமைத்ததாய் 
பெருமைச் செய்கிறாள் 
ரோஸ்லினா

"ஏம்ப்பா.., 
ஏசுவும்,முருகரும் 
ஃபிரண்டா?" 
எனக் கேட்கிறாள் 
கிரேஸியா!

"அப்பா, 
அவளுக்கு ஒன்றும் 
தெரியவில்லை.. 
அல்லாவும், ஏசுவும் தான் 
ஃபிரெண்ட்?" 
என்றுச் சிரிக்கிறான் 
ஸ்டீஃபன்!

ஜார்ஜிக்கோ 
பதில் சொல்லத் தோன்றவில்லை

மகிழ்ச்சியிலேன் 
மதத்தை நுழைக்க வேண்டும்?
அப்படியே 
இருந்து விட்டுப் போகட்டும்... 
ஏசுவின் பிறந்த நாள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

- மு.முகமது பாட்சா* 
24/12/2016

No comments:

Post a Comment

Popular Posts