Tuesday, 5 December 2017

பூமி பொசுங்குகிறது


படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் குளோஸ் அப்

ஆட்டுக் குட்டிகளுடன் அலைந்து கொண்டிருப்பவனை 
மேய்ச்சலின் நிலம் விழுங்கிக் கொண்டிருக்கிறது 
ஓநாய்களின் பற்வரிசைகளை முத்துக்களாய் கோர்த்தவன் 
இரத்தப் பசியுடன் அலைந்து கொண்டிருக்கிறான் 
தந்திர வார்த்தைகளை ஜபமாலையாக உருட்டியவர்கள் 
சாத்தானின் முத்திரைகளை விதைத்துவிட்டுப் போகிறார்கள், 
வருடித்த மழை மேகங்கள் உக்கிரத்தின் விகாரம் 
அகலிடம் அகலியம் விழுங்கிச் சீரணிக்கும் பொழுதில் 
சிறு புல்லும் ஏனென்றக் கேள்விகளில் தலை குனிந்து நிற்கும் 
எரிக் கற்களின் எந்திரமழையில் உய்த்தல் உலர்ந்து போக 
எள்ளுதலின் துய்த்தல் உறைந்து போகும் 
மௌனம் எழுந்து நிற்கும் விகார ரூபத்தின் கீழ் 
ஆசைகளை இறக்கி வைத்து விடியல் கேட்பர் வரிசையில் 
ஆட்டுக் குட்டிகளும் அவனும் தகித்துத் தண்ணீர் கேட்கிறார்கள் 
சிறு கனவென விரியும் புல்லில் நீரருந்த அனுமதி 
கள்ளியின் பாலருந்திய அவர்களின் 
காபால மூளையில் வழியும் தந்திரம் சீழெனப் பெருக... 
ஆதாமை அச்சுறுத்திய அக் கனிமரம் காய்க்கத் தொடங்குகிறது 
ஏவாள் நிர்வாணம் போதுமென ஆடைகளை விலக்கி நடக்கிறாள் 
பூமி மெல்ல பொசுங்கிக் கொண்டிருக்கிறது.

- மு.முகமது பாட்சா*

No comments:

Post a Comment

Popular Posts