Wednesday, 20 December 2017

தன்போகம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

இரவில் விழித்துக் கொண்ட குரங்கு 
வனத்தை நோக்கி ஓடியது, 
விழுதுகளைப் பிடித்து இடம் மாறியது, 
கொத்துப் பழங்களை எச்சில் செய்தது, 
சொட்டும் தேனை நக்கிச் சுவைத்தது, 
முற்றும் மறந்த மோன நிலையில் 
கொட்டும் மழையில் நனைந்து களித்தது , 
நதியில் மூழ்கி யெழுந்த வேளையில் 
உருவம் தொலைத்து அழகனானது, 
மனத்தைப் பிசைந்து வடிவம் செய்து 
அழகியொருத்தியை அருகில் வைத்தது, 
பஞ்சணையொன்றில் படுக்கவைத்து, 
பழரசம் பருகி படர்ந்தக் கொடியாய் 
பிணைந்து இணைந்தது , 
அழகியின் முகத்தில் அகோரம் துளிர்க்க 
கோரம் மிகைத்து பிசாசன் ஆனது, 
இரவும் தன்னை இழந்து நிற்க, 
உருவம் தொலைத்து மனிதம் பூசி, 
குரங்கும் , மனதில் இறந்து கிடந்தது !

- மு.முகமது பாட்சா*
20/12/2016

No comments:

Post a Comment

Popular Posts