
நானென்பதொரு நிழல்
நிழல்தரும் போதை
போதையின் சுவாசப் பிழை
பிழை திருத்தா மொழி
மொழி வகுக்காத கலை
கலையென்ற மாய எழில்
எழில் தளிரும் துளிர்
துளிரறியா கடும் புயல்
புயலசைக்கும் அலை
அலையிசைக்குமொரு இசை
இசைப் பாவும் நதி
நதியறியாச் சுனை
சுனையூறும் பாறை
பாறையின் வெளி பசும்புல்
பசும்புல் மேவும் காடு
காடறியாத உறை பனி
பனி உலர்த்தும் வெயில்
வெயில் கருக்கும் சருகு
சருகுமிசைக்கும் களிமண்
களிமண் பண்டம் நான்
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment