
கனவில்
அடிக்கடி வந்துப் போகிறான்...
ஒரு நடிகனின் சாயல்
நிச்சயமாக இருக்கிறது,
சிரிப்பின் ஓரத்தில்
சில்மிஷத்தை ஒட்டிக் கொண்டு
பார்வையில் பந்தாட
அவனுக்கு மட்டுமேத் தெரிகிறது,
காமத்தைத் தடவி
காதில்
இரகசியம் சொல்லுவான்,
அவனுக்காகவே
தினம் சிலக் கவிதைகள்!
மோகிக்காத பிரசவத்தில்தான்
எத்தனைக் குழந்தைகள்?
ஆனாலும்,
அப்பா பார்த்த வரன்
அப்படி யில்லை!
வழுக்கைத் தலையில்
அப்பா போலவேச் சிரிக்கிறான்...
நிறம் : சற்றுக் கருப்புதான்,
மாசச் சம்பளம்
ஆயிரத்தில் அறுபதாம்!
அழகா,
வந்துச் சோறுப் போடப் போகிறது?
சம்மதம்தான்!
-மு.முகமது பாட்சா*
14/12/2015
No comments:
Post a Comment