Thursday, 14 December 2017

அச் சொல்

forest fire painting க்கான பட முடிவு

ஒரு கணம் 
ஒரு சொல்லை வீசிவிட்டுச் செல்கிறாய் 
அந் நொடி 
அஃது ஆயிரம் அம்புகள் புதைந்த பாறை 
விழிகளைப் பறித்து வீசிவிடும் அஸ்திரம் 
மனதிற்குள் உட்கார்ந்து பிறாண்டும் மந்தி 
கனவுகளைப் பறித்துவிடும் படர் மின்னல் 
காட்டுக்குள் அலையவிடும் கடுமிருட்டு 
காதலை 
கௌரவமாய்க் கொலை செய்யும் ஆயுதம் 
தனிமைக்குள் கரைக்கும் அமிலம் 
அச் சொல்லை அடர்வனத்தில் புதைக்கிறேன் 
பற்றியெரிக்கிறது காட்டுத் தீ 

- மு.முகமது பாட்சா*

No comments:

Post a Comment

Popular Posts