
நான் சாவியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்
நீ பூட்டைச் சுமந்து கொண்டிருக்கிறாய்
வார்த்தைகள் அநாதிகளாக நிற்கின்றன
இரவின் சொப்பனத்தை
எரித்துக் குளிர் காய்கிறது நிலா!
சன்னலின் வழி எட்டிப் பார்க்கும் குரோட்டன்ஸ்
போன்சாய் மரத்திடம் என்ன பேசி விடப் போகிறது?
அமைதியை திருடிக் கொண்ட தனிமை
கடலினும் பெரிது
இரவின் நீளத்தை அளந்து பார்க்கிறேன்
செவ்வாய் கிரகத்தில்
புன்னகையை வரைந்து கொண்டிருக்கிறாய்!
தொட்டி மீன்களில்
உன் கண்கள் நீந்துவதை இரசிக்கிறேன்
உடைந்த வளையல் சேகரங்களில்
ஒட்டியிருக்கும் என் இரத்தம்
உன் மிச்ச இதயத்தை வரைந்து காட்டுகிறது
உன் வார்த்தைகளை தேடியெடுத்து
கவிதையெழுதுகிறேன்
உனது கல்யாண பத்திரிக்கையின் பின்புறம்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment