Wednesday, 20 December 2017

பட்டாம் பூச்சிகளாய்


தானியங்கு மாற்று உரை இல்லை.
கதையின் வாசலில் உட்கார்ந்து கொண்டு 
கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன் , 
பட்டாம் பூச்சிகளின் வண்ணங்களை 
தூவிச் செல்லும் அந்தப் பறவையின் பெயர் 
பட்டாம்பூச்சி என்றே கூட இருக்கலாம் , 
வண்ணங்களை எழுத்தில் சேர்த்த பிறகுதான் தெரிந்தது 
நானொரு ஓவியன் என்று ! 
என் ஓவியத்தில் மிளிர்ந்த தாரகையின் 
கண்களின் மையெடுத்து 
கவிதைக்கு முற்றுப் புள்ளி வைக்கிறேன், 
அஃது அவள் கன்னத்தில் 
திருஷ்டிப் புள்ளியாய் உட்கார்ந்திருக்கிறது , 
கவிதையெழுத வந்தவன் 
அவளோடு கதையொன்றில் நுழைகிறேன், 
கதையின் வாசல் எங்களுக்காகவே திறந்திருக்கிறது, 
உங்கள் வீட்டின் சன்னல் கதவுகளை மூடி வையுங்கள், 
நாங்கள் பட்டாம் பூச்சிகளாய் உருமாறி 
உங்களின் வீடுகளுக்குள்ளேயும் நுழையக் கூடும் !
- மு.முகமது பாட்சா*
21/12/2016

No comments:

Post a Comment

Popular Posts