Friday, 8 September 2017

நான் இரசித்த கவிதைகள் - 58


எதிலும் நீ

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புகைபிடித்தல் மற்றும் தாடி

உள்ளும் புறமும் தெய்வாம்சம் 
எனக்குள்ளது ! நான் 
எதைத் தொட்டாலும், யாரேனும் 
எனைத் தொட்டாலும் 
எனக்குப் புனித மாகும் ! 
பிரார்த்தனை மணத்தை விட எனது 
அக்குள்ளின் வாசனை 
மிக்க நேர்த்தி யானது ! 
எனது சிரமானது 
ஆலயம், பைபிள் போன்ற 
சமய விதிகளை விடச் 
சாலச் சிறந்தது ! 
ஒன்றைவிட நான் மேலாய் வேறொன்றை 
வழிபட்டால் அது என் 
உடலுறுப்பின் வளர்ச்சியால் தான் ! 

என் பளிங்கு வார்ப்பில் 
இருப்பது நீ ! 
நிழலில், நில வசிப்பில் 
இருப்பது நீ ! 
நிமிர்ந்த குதிரை ஓட்டி நீ ! 
என் உழுத நிலத்தில் 
எது புகுந்தாலும் 
அது நீதான் ! 
என் செழித்த குருதி நீ ! 
என் வாழ்வின் 
வெளுத்த பாலோட்டம் நீ ! நான் 
அழுத்தித் தழுவும் மார்பு நீ ! 
எந்தன் மூளை 
உந்தன் ஆன்மீகச் சுழற்சி ! 
சொட்டுச் சொட்டாய்க் கசியும் 
மேப்பிள் மரச்சார் நீ ! 
கோதுமை ஆண்மை நார் நீ ! 

தாராளமாய்க் கொடை அளிக்கும் 
சூரியன் நீ ! 
என் முகத்துக்கு 
ஒளியும் நிழலும் 
அளிக்கும் ஆவி முகில் நீ ! 
வேர்க்கும் சிற்றோடை, பனித்துளி நீ ! 
உடல் உறுப்பை எழுப்பும் 
உணர்வுத் தென்றல் நீ ! 
தேக்கு மரக் கிளைகள் நீ ! 
அகன்ற செழிப்புத் தளங்கள் நீ ! 
சுழிவுப் பாதை களில் 
இளைப்பாறும் சுமைதாங்கி நீ ! 
நின் கைகளைப் பற்றினேன், 
நின் முகத்தில் முத்த மிட்டேன், 
நானென்றும் தொடும் 
மானிடப் பிறவி 
நீ ஒருத்தி தான் ! 


வால்ட்விட்மன் (புதுக் கவிதையின் தந்தை) 

தமிழில் சி.ஜெயபாரதன் (கனடா)

No comments:

Post a Comment

Popular Posts