.....பாஞ்சாலி.....

தெரு கூத்து பாஞ்சாலி
கார் குழலை அலையவிட்டு
விழிகளில்
ரெளத்திரம் கூட்டி
சப்தமிட்டு பாடுகிறாள்,
.
"துகிலுரித்தோன் தொடை பிளந்து
கொப்பளிக்கும் உதிரத்தை
கூந்தல் தடவி...
பொட்டு வைப்பேன்..."
.
காட்சி பார்ப்பவர்
கண்களிலும்
ரெளத்திரம் கூட்டி.....!
.
.....*காட்சி மாறுகிறது*.....
.
அவளின்
ஒப்பனை கலைத்து
துயில் உரித்து
மெல்ல மெல்ல படர்கிறான்
கூத்துக்கு
தலமை தாங்கிய
கடவுளின் பெயர் தாங்கி!
.
.....ரெளத்திரம்
...................அவளுக்குள் புதைந்து
........................................................புகைகிறது!
.....வெளிப்பாடாய், அவள் விழிகளில் வெந் நீர்!.....
- மு.முகமது பாட்சா

தெரு கூத்து பாஞ்சாலி
கார் குழலை அலையவிட்டு
விழிகளில்
ரெளத்திரம் கூட்டி
சப்தமிட்டு பாடுகிறாள்,
.
"துகிலுரித்தோன் தொடை பிளந்து
கொப்பளிக்கும் உதிரத்தை
கூந்தல் தடவி...
பொட்டு வைப்பேன்..."
.
காட்சி பார்ப்பவர்
கண்களிலும்
ரெளத்திரம் கூட்டி.....!
.
.....*காட்சி மாறுகிறது*.....
.
அவளின்
ஒப்பனை கலைத்து
துயில் உரித்து
மெல்ல மெல்ல படர்கிறான்
கூத்துக்கு
தலமை தாங்கிய
கடவுளின் பெயர் தாங்கி!
.
.....ரெளத்திரம்
...................அவளுக்குள் புதைந்து
........................................................புகைகிறது!
.....வெளிப்பாடாய், அவள் விழிகளில் வெந் நீர்!.....
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment