
கண்ணயர்ந்த வேளையில்தான்
காணாமல் போயிருக்க வேண்டும் ,
என்னை நானே எப்படித் தேடுவது?
கவிதைகளில் இருப்பது நிழல் மட்டும்தான்,
நிஜமே நிஜமில்லை யென்பதும்
எப்படிச் சரியாகும் ?
கண்ணசைத்தாள் என்பதற்காக
அவள் களவாடியிருக்க வாய்ப்பில்லை !
கனவுகளில் அவளோடுதானே இருந்தேன்!
கவலைகள் தின்றிருக்கலாம் ,
கடன்கள் காணாமல் போக்கியிருக்கலாம்,
காணமல் போனவனைத் தேடி
என்ன ஆகப் போகிறது ?
மரணம் வந்தவனை எழுப்பவாச் செய்கிறோம் ?
இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்,
தொலைந்துப் போனவன்
ஒரு நாள் தானாக வருவான்,
அப்போது என்னிடம் கேட்டுக் கொள்ளலாம்
'எங்கே நான் தொலைந்து போனேன்!' என்று
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment