Monday, 18 September 2017

முதுமையின் முத்தாய்ப்பு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

முதுமையின் முத்தாய்பில்
உதிர்கிறது மனம்..
.
இளமையின் ஆட்டங்களில்
தளர்வை எள்ளிய நாட்கள்!
.
முதுமையின் குறைகளை
திமிரென்று தள்ளிய திமிர்கள்!
.
பட்டால்தான் தெரிகிறது
பட்டினத்தான் வரிகள்!
.
.....தொலையட்டும் கிழட்டு பருவம்....

***

தானியங்கு மாற்று உரை இல்லை.

சுற்றி திரிந்த பறவை
நூலறுந்து
கீழே விழுகிறது...
.
பட்டம் விட்டவன் மனம்
பதறுகிறது!
.
மட்டில் எதுவும்
நிலையில்லை...
.
மனத்தின் பிரமை
சுற்றுகிறது உலகம்!
.
.....நிலையான வாழ்வைத் தேடி!.....

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts