Sunday, 17 September 2017

பறவைகளின் மரணம்



எரிகின்ற தீயின் 
விறகுகளைப் பிடுங்கி 
நதியினில் எறிகின்றேன், 

வெப்பத் தீயில் 
வீழ்ந்து கிடந்த பறவைகளுக்கும் 
உறவுகள் இருக்கும் ,

கூட்டடைவின் வேளையில் 
தேடல்கள் நடக்கும் , 
நாளை எதிர் பார்த்து 
நாளைகள் நகரலாம் , 

நதிக்கும் 
எனக்கும் மட்டும்தான் தெரியும், 
பறவைகளின் மரணம் 
மரணமான விஷயம் ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts