கடிதம் பற்றிய வாசிப்பு பிரதி

கடிதம் எழுதப் பட்டிருந்த தாளில் ஒரு பாதியில் கடலும்
மறு பாதியில் நண்டுகள் போல் சில சொற்களும் ஊர்ந்தன .
கரையில் நடந்து கொண்டிருந்த சொற்களின் காற்சுவட்டை
அழிக்கும் விதமாகவும் அலைகள் அடித்தன.
தாள்களை தோண்டி ஒழித்தன சில சொற்கள்.
வெளியில் கரையேறிக் கொண்டிருந்தன சில சொற்கள்
அவளின் நினைவுகளைப் போல்
பேரிரைச்சலாய் அதிர்ந்து கொண்டிருந்த கடலருகே கவனமற்ற
ஒரு குழந்தையைப் போல் விளையாடிக் கொண்டிருந்தேன்
கரையில் ஊர்ந்து கொண்டிருந்த சொற்களை
அடுக்கி வாசிக்க முடியவில்லை,சில சொற்கள்,சில எழுத்துக்கள்,
சில வாக்கியங்கள் தரையை பொத்துக் கொண்டு வெளிவருவதும் ,
தோண்டி மறைந்து கொள்வதுமாய் இருப்பதால்
அவள் சொல்ல நினைப்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை.
முடிவான எதையும் சொல்ல விரும்பவில்லை என்பதை
எழுதிருந்தால் போலும் .
சில வேளைகளில் தாளைக் கடந்து பாயும் அலைகள்
அதே வேகத்தில் திரும்பி விடுகின்றன
அடிக்கடி தாளுக்குள் குதித்துவிட விரும்புகிறேன்
பின்னரே பின்வாங்கி கரையில் நின்றுவிடுகிறேன்
முன்பொரு வெய்யில் நாளிலும் இப்படித்தான்
மழையை எழுதி அனுப்பி இருந்தாள்
தாளில் மிக மிக தூரத்தில் அவளுடைய இரண்டு கண்களும்
நீந்திக் கொண்டிருந்தன
மழையை வாசிக்க வாசிக்க நான் கரைந்ததை நினைத்துப் பார்க்கிறேன்
இத் தாளில் கடிதமாகியுள்ள கடலும் நிலப் பரப்பும்
இனி நான் அடிக்கடி வந்து உட்காருமிடமாகிவிடும் .
.
கவிஞர் றியாஸ் குரானா - இலங்கை

No comments:
Post a Comment