தேடியும் கிடைக்காத ஆடு

தேடியும் கிடைக்காத ஆடுகளைத்
தேடிக் கொண்டிருந்தான் கீதாரி,
நாட்டாமை விற்ற ஆடுகளில்
நாலைத்தான் ஓட்டிப்போனான் கசாய்க் காரன்,
இன்னமும் அவனுக்கிரண்டு ஓட்டவேண்டும்,
சின்னவீட்டுக்காரிக்குப்
பண்ணை ஓட்டிப் போன
குறும்பாட்டைச் சேர்த்தாலும்
எண்ணிக்கையாய் மூணு குறைச்சல்,
பண்ணையாரம்மா
பொண்ணு வீட்டுக்கு ஓட்டி விட்டது இரண்டாடு,
அப்படியும் ஒண்ணு குறைச்சல்,
தூக்குச் சாப்பாட்டை ஆட்டுக்குக் கொட்டிவிட்டு
அலக்கழிஞ்ச அவனுக்கு
பண்ணையார் கணக்கு நோட்டில்
கடனாய் உட்கார்ந்து கொண்டது
அந்த ஆட்டுக் குட்டி,
'சாப்பிட்டுப் போடா' என்று
பண்ணையாரம்மா போட்ட கறி சோத்தில்
செத்துக் கிடந்த ஆட்டுக் குட்டி மட்டும்
அவன் கணக்கிற்கு வரவில்லை...
'அவனுக்கு ரெண்டு நல்லியை எடுத்து வை'
என்று சொன்ன பண்ணையாரின் வாசம்,
அவன் விரல்களில்
இப்போதும் ஒட்டிக் கொண்டிருந்தது.
- மு.முகமது பாட்சா

தேடியும் கிடைக்காத ஆடுகளைத்
தேடிக் கொண்டிருந்தான் கீதாரி,
நாட்டாமை விற்ற ஆடுகளில்
நாலைத்தான் ஓட்டிப்போனான் கசாய்க் காரன்,
இன்னமும் அவனுக்கிரண்டு ஓட்டவேண்டும்,
சின்னவீட்டுக்காரிக்குப்
பண்ணை ஓட்டிப் போன
குறும்பாட்டைச் சேர்த்தாலும்
எண்ணிக்கையாய் மூணு குறைச்சல்,
பண்ணையாரம்மா
பொண்ணு வீட்டுக்கு ஓட்டி விட்டது இரண்டாடு,
அப்படியும் ஒண்ணு குறைச்சல்,
தூக்குச் சாப்பாட்டை ஆட்டுக்குக் கொட்டிவிட்டு
அலக்கழிஞ்ச அவனுக்கு
பண்ணையார் கணக்கு நோட்டில்
கடனாய் உட்கார்ந்து கொண்டது
அந்த ஆட்டுக் குட்டி,
'சாப்பிட்டுப் போடா' என்று
பண்ணையாரம்மா போட்ட கறி சோத்தில்
செத்துக் கிடந்த ஆட்டுக் குட்டி மட்டும்
அவன் கணக்கிற்கு வரவில்லை...
'அவனுக்கு ரெண்டு நல்லியை எடுத்து வை'
என்று சொன்ன பண்ணையாரின் வாசம்,
அவன் விரல்களில்
இப்போதும் ஒட்டிக் கொண்டிருந்தது.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment