Sunday, 17 September 2017

இசையோடு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார்

இசையின் ஓரங்களில் 
எப்போதும் 
உட்கார்ந்து கொள்கிறேன், 
மெளனத்தின் இருப்பிலும் 
மெல்லிய சங்கீதம் தேவை ! 
கோபத்தின் சகதியில் 
வீழும் போதும் 
ஏதோ ஒரு பாட்டு 
தூக்கி விடுகின்றது ! 
தாலாட்டு கேட்டு வளர்ந்த 
தகறாராக இருக்கலாம், 
மழைத் துளிகளின் சப்தங்கள் 
கவிதைகளாகும் முன்பு 
இசைத் துளிகளாகத் தான் 
அறிமுகமாகிறது ! 
வசைகளையும் இசைகளாகதான் 
மொழி பெயர்த்துப் பார்க்கிறேன், 
கனவிலும் ஒரு சங்கீதம் 
பின்னனி இசைக்கிறது ! 
கவிதைகளின் சங்கீதத்தையும் 
வாசிக்க முடிகின்றது ! 
கதைகளிலும் சங்கீதம் இழைவதை 
நான் கேட்கிறேன் ! 
இரவின் நிசப்தத்தில் விரவும் 
சங்கீதத்தை யார் ரசிக்கக் கூடும் ? 
இசையும் நானும் 
ஒருமித்தே பயணிக்கின்றோம் , 
பிரிக்காத மொழியாக, 
மறக்காத தமிழாக ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts