Sunday, 3 September 2017

மீண்டெழும்

தானியங்கு மாற்று உரை இல்லை.

மீண்டெழும்

ஒரு தேசத்தில்
ஒரு விருட்சம்
அழிந்து விட்டதாகச் சொல்கிறார்கள்?
பறவைகள்
அதன் பழங்களைச் சாப்பிட்டு
எங்காவது சென்றிருக்கும்!
மீண்டும் பறந்து வந்து எச்சமிடலாம்!
விருட்சங்கள் என்றும்
செடிகளாய் வாழ்வதில்லை!

***

பகல் உறங்குகிறது

முதலில், பகலை
இரவு விழுங்கி விட்டதாகச் சொன்னார்கள்!
பிறகு ,நிலவையும் 
விழுங்கி விட்டதாகச் சொன்னார்கள்!
தன்னையும் விழுங்கி விடுமோ யென்று
வீடுகளில் பதுங்கிக் கொண்டார்கள்!
விடிந்த பிறகுதான் தெரிந்தது.....
பகல் உறங்கச் சென்றதென்று!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts