Sunday, 17 September 2017

இதுதான் கிணற்று நீரா?


தானியங்கு மாற்று உரை இல்லை.

பள்ளத்தின் நீரைப் பருகிவிட்டு 
இதுதான் கிணற்று நீர் என்கிறீர்கள், 
திரைக்கதை வசனத்தில் 
ஒடிந்திருக்கும் வார்த்தைகளை 
கவிதையென்று எப்படிச் சொல்வது, 
படிமத்தில் உட்கார்ந்து 
நகர்ந்து கொண்டிருக்கிறேன்... 
அங்கேதான் எனக்கான ஆயுதங்கள் 
தாராளமாகக் கிடைக்கின்றன, 
படிமமே நான்தான் என்று சொல்லும் 
அறியாமையை என்ன செய்வது 
கவிதைக்குள் 
காதலைப் புதைத்துவிட்டு நகர 
நானொன்றும் 
அனாரின் அர்த்தமற்ற காதலனல்ல... 
கிடைக்கும் வரை தேடுமென்னை 
நீங்கள் மஜ்னூவாகப் பார்த்தால் 
நானொன்றும் மறுக்கப் போவதுமில்லை, 
நீங்கள் அறிவாளிகளாகவே இருங்கள் 
நான் முட்டாளாகவே 
என் கவிதைக்குள் என் லைலாவை 
தேடிக் கொள்கிறேன். 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts