
உலகம்
உருண்டையாக இருக்க
வாய்ப்பே யில்லை
.
அரசியல்
தட்டையாக இருக்கிறது !
***
சில உண்மைகள் மீதுதான்
சில பொய்கள்
நடப்பட்டிருக்கின்றன !
அதன் விருட்ச நிழல்களில்
நிச்சயம்
வெட்பம்தான் தகிக்கும் !
.
அதன் பூக்களை
பறித்து விடாதீர்கள்...
சாத்தானின் பூசைக்கு
அவைகள்
தேவைப் படுகின்றன !
***
அரசியலை திசை திருப்ப
சில மரணங்களும்
சில தற்கொலைகளும் கூட
தேவைப் படுகிறது !
.
அவைகளோடு
சில நியாயங்களையும்
தர்மங்களையும் புதைக்க !
***
கடவுள் இருக்கிறாரா,
இல்லையா
விவாதமாகவே இருக்கட்டும்.
.
.....மனிதன் இருக்கிறான். மறந்துவிடாதீர்கள்.....
***
தேர்தல்..
.
ஒரு நாள் புகழ்கிறாய்!
ஒரு நாள் திட்டுகிறாய்?
.
ஒரு நாள் அவரை ஓஹோ என்கிறாய்!
மறு நாள் இவரை ஆஹா என்கிறாய்?
.
மூன்றாவது அணி என்கிறாய்!
234ம் எனக்கே என்கிறாய்?
.
நீ என்னதான் சொல்ல வருகிறாய்?
.
நீ மட்டும் தான்
இந்த விளையாட்டை
விளையாடுவாயா?
.
நாங்களும் தொடங்கி விட்டோம்
.
.....கட்சி மாறும் விளையாட்டு!.....
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment