Tuesday, 5 September 2017

நானென்ற நான்

நானென்ற நான்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

'நான்' என்ற அகந்தை
எனக்குள்
அரியாசணம் போட்டு 
அமர்ந்துக் கொண்டு
'கர்வம்' என்ற கிரீடம்
அழகான தென்று
பாடம் சொல்கிறது!
.....
உறவுகளை வெறுக்கச் சொல்லி
கற்றுக் கொடுக்கிறது!
.....
சிரிப்பை சிக்கனம் செய்ய
நிலையாய் நிற்கிறது!
.....
'நான்' ஆட்சியில் இருந்தால்
மக்களை அடிமைகளாய் 
பார்க்கச் சொல்கிறது!
.....
'நான்' வசதியில் இருந்தால்
ஏழைகளை, காயம் செய்து 
ரசிக்கச் சொல்கிறது!
.....
உலகமே
'நான்' என்ற அச்சில் உழல்வதாக
வேதம் ஓதுகிறது!
.....
'நான்' - என்னை என்றுமே
நானாக இருக்க
விடுவதே யில்லை!
'கர்வம்' என்ற கிரீடத்தை
கழற்றி வைக்கும் வரை!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts