Monday, 18 September 2017

வாலிப மாற்றங்கள்

.....#வாலிப #மாற்றங்கள்!.....

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், புன்னகைப்பவர்கள்


பூ பூத்த விழிகளுக்குள்
புகுந்து பார்க்கும்
புதுக் கனவு!
.
மதமதர்த்த நெஞ்சுக்குள்
முட்டி நிற்கும்
ஏக்கங்கள்!
.
தனிமையிலும்
தான் சிரிக்கும்
வாலிபத்தின் மோகங்கள்!
.
முகம் கழுவி முகம் துடைத்தும்
முகம் கழுவும்
ஆசைகள்!
.
கண்ணாடியின் முன் நின்று
தன்னை
தானே ரசிக்கும் அழகுகள்!
.
தலைவாரி கலைத்து விட்டு
மீண்டும்
தலை வாரும் மாடல்கள்!
.
துணை ஒன்று வரும் வரை
தொடருகின்ற
மோகங்கள்!
................இல்லை!...இல்லை!...........
வாலிபத்தின் மாற்றங்கள்!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts