Friday, 8 September 2017

கட்டியக்காரன்

தானியங்கு மாற்று உரை இல்லை.

அரிதாரம் பூசி 
அடவுகட்டியாடும் கூத்தின் மேடையில் 
கட்டியக்காரனை 
கண்டு நகைக்கும் ஜனத் திரளில் 
கடமைக்கு வராமல் 
வாத்தியின் வசவுகளுக்கிடையிலும் 
பிழை ஜதியில் சரியாக ஆடி 
சிரிப்பைக் கூட்டி 
கதை வடிவம் கொடுக்கும் அவனுக்கும் 
சோகமுண்டு, ஒரு கதையுமுண்டு 
தவறி விழுந்த காயமுண்டு 
தெருக் கூத்தாய் வாழும் வாழ்க்கையுண்டு 

வரலாற்றுப் பிழையுமுண்டு ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts