ஆற்றங்கரை நாகரீகங்கள்
தொலைந்து போன வரலாற்றை
மீட்டெடுக்க யாருமில்லை

பசுமை போர்த்த வயல்கள்
பாறைகளை போர்த்திக் கிடக்கின்றன
ஆலைகளின் புகைக் கூட்டில்
நோயாளிகளின் சுவாசக் காற்று
வாகனங்களின் வசதிகளுக்குள்
வயோதிக வாலிபர்கள்
மதங்களின் சாயம் பூசிய
மனிதம் கொன்ற மனிதர்கள்
நதிகளுக்கும், கடல்களுக்கும்
மொழிகளின் சாயம் பூசப் படுகின்றது
வல்லூறுகளின் வாக்கு மொழிகளில்
அகிம்சை வாசிக்கப் படுகின்றன
வசதிக்காகத் திருத்தப் படுகின்றன
வரலாற்றுப் பார்வைகள்
காதல் இசைகளைக் காயம் செய்கிறது
சாதிய விரல்கள்
சத்திரங்களைத் தொலைத்த நாகரீகம்
நித்திரைகளையும்
தொலைத்துதான் வாழ்கிறது
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment